Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

போய்கிட்டே இருங்க! 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' - தமிழகத்தின் முதல் சுங்கச்சாவடி அறிமுகம்

போய்கிட்டே இருங்க!  'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' - தமிழகத்தின் முதல் சுங்கச்சாவடி அறிமுகம்
Paranur toll plaza / imagesource: rajeshamlw

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடி, தமிழகத்தின் முதல் கட்டண வசூல் பெட்டிகள் இல்லாத நவீன சுங்கச்சாவடியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடி, தமிழகத்தின் முதல் கட்டண வசூல் பெட்டிகள் இல்லாத நவீன சுங்கச்சாவடியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இங்கு ‘மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ’ எனப்படும் பல வழித்தட கட்டற்ற போக்குவரத்து அமைப்பு தற்போது சோதனை முறையில் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூத்த அதிகாரி கூறியதாவது: "பொதுவாக மனிதர்களால் கட்டணம் வசூலிக்கப்படும் பூத்துகளுக்குப் பதிலாக, தற்போது ஆர்எஃப்ஐடி ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், ஃபாஸ்டேக்-தானியங்கி நம்பர் பிளேட் அறியும் அமைப்பு ஆகியவற்றுடன் கூடிய உயரமான மேற்கூரைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஃபாஸ்டேக் கார்டுகள் கொண்ட வாகனங்கள், கட்டண விலக்கு அளிக்கப்பட்ட விஐபி வாகனங்கள் எவ்வித காத்திருப்பு நேரமும் இன்றி அதிவேகமாக கடந்து செல்ல முடியும். சுங்கச்சாவடியை நெருங்குவதற்குச் சற்று முன்பாகவே இந்த ஃபாஸ்டேக் கார்டுகள் தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டுவிடும்.

அதே சமயம், ஃபாஸ்டேக் ஒட்டப்படாத வாகனங்கள் அல்லது கணக்கில் போதிய இருப்புத் தொகை இல்லாத வாகனங்கள் இந்தச் சுங்கச்சாவடியைக் கடந்தால், மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகள் மூலமாகத் தானியங்கி முறையில் அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியை தினமும் சராசரியாக சுமார் 46,500 வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த புதிய எம்எல்எப்எப் அமைப்பு வாகனங்களை மிக விரைவாகக் கண்காணித்து செயல்படுத்துவதால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைவதோடு பயணிகளின் மதிப்புமிக்க நேரமும் மிகப்பெரிய அளவில் மிச்சமாகும் என்று மூத்த அதிகாரி கூறினார்.

குறிப்பாக, தென் மாவட்டங்களை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாட்களிலும் செல்லும் நிலையில், இந்தப் புதிய கட்டற்ற போக்குவரத்து நடைமுறை வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் பெரும் பயனுள்ளதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




முந்தைய செய்தி
ரூ.1,499-க்கு 4ஜி போன் - ஜியோ சிறப்பு சலுகை
அடுத்த செய்தி
ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடலாம்: தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம்

தொடர்புடைய செய்திகள்